உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கணபதி சுவாமி ஆசிரமத்தில் 13ம் ஆண்டு குரு பூஜை!

கணபதி சுவாமி ஆசிரமத்தில் 13ம் ஆண்டு குரு பூஜை!

புதுச்சேரி: கணபதி சுவாமிகளின், 13ம் ஆண்டு, குரு பூஜை விழா நேற்று நடந்தது. தட்டாஞ்சாவடியில், குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் எதிரில், கணபதி சுவாமிகள் ஆசிரமம் அமைந்துள்ளது. இங்கு, குரு பூஜை விழா நிகழ்ச்சிகள், மகா குரு தீபா ஆராதனையுடன் நேற்று முன்தினம் துவங்கியது. குரு பூஜை விழா நேற்று நடந்தது. மகா யாகசாலைத் திருமுறை வேள்வி, அச்சுதானந்த சுவாமிகள் கீர்த்தனை நிகழ்ச்சி ஆகியவற்றை தொடர்ந்து, சுவாமிக்கு மகா அபிஷேகமும், ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடந்தது. மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. ’சற்குரு-மொழி’ என்ற தலைப்பில், ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி மதியம் நடந்தது. மாலையில், திருவடி ஞான தீட்சை பெற்ற அடியார்களின் மகேஸ்வர பூஜையும், ஆசி பெறும் நிகழ்ச்சியும் நடந்தது. விழா ஏற்பாடுகளை, கணபதி சுவாமிகள் ஆசிரம அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !