மார்கழியில் சுபநிகழ்ச்சிகள் நடத்தாதது ஏன்?
ADDED :5313 days ago
மார்கழியில் சுபநிகழ்ச்சிகள் நடத்தாதால், சிலர் இம்மாதத்தை பீடை மாதம் என்கின்றனர். இது தவறாகும். பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி என்று சொல்லியிருப்பதில் இருந்தே நாம் இம்மாதத்தின் பெருமையை உணர்ந்து கொள்ளலாம். மார்கழி மாதம் தெய்வங்களை வழிபடுவதற்குரிய உன்னத மாதமாகும். நமது ஆசைகளை ஒதுக்கி வைத்து விட்டு முழுமையாக நோன்பிருந்து இறைவனை அடைய வேண்டிய மாதம் இது. எனவேதான் இம்மாதத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்துவதில்லை.