கார்த்திகை புராணத்தில் ஒரு தகவல்!
ADDED :4243 days ago
ஓர் அரசு ஆலும் வேம்பும்
ஒரு பத்து புளியும் மூன்று
சீருடன் விளவும் வில்வம்
மூன்றுடன் சிறந்த நெல்லி
பேர் பெறும் ஐந்து தென்னை
பெருகு மா ஐந்தும் ஒன்றும்
யார் பயிர் செய்தாரேனும்
அவர்க்கில்லை நரகம்தானே-
கார்த்திகை புராணத்தில் வரும் பாடல் ..
மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும் கார்த்திகை மாதம்- சுக்ல பட்சத்தில்... அரசு, ஆல், வேம்பு ஆகிய மரங்களில் ஒவ்வொன்றும், விளா, வில்வம், நெல்லி ஆகிய மரங்கள் மும்மூன்றும், பத்து புளிய மரங்கள், மாமரம் ஐந்து, தென்னை ஐந்து... இப்படி ஒன்பது வகை மரங்களையும் நட்டு வளர்த்தால், அவருக்கு நரகம் என்பதே இல்லையாம்.
மரங்களின் தத்துவத்தையும், அவசியத்தையும், அவற்றை நட்டு அழகாக சொல்லிவைத்திருக்கிறார்கள் பார்த்தீர்களா? உலகெங்கும் மழை வளம் சிறக்கவும், சுபிட்சம் தழைக்கவும் இதுபோன்ற கருத்துள்ள பாடல்களை கோயில்களில் எழுதிவைத்து செயல்படுத்தலாமே.