புதுச்சேரி ஸ்ரீவாரி உண்டியல் நகர் வலம்!
ADDED :4241 days ago
புதுச்சேரி: வைத்திக்குப்பம் வேங்கடாசலபதி பஜனைக் கூடம் சார்பில், 51ம் ஆண்டு ஸ்ரீவாரி உண்டியல் நகர் வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பஜனைக்கூட சத்தியமூர்த்தி தலைமையில், நாளை 12ம் தேதி மாலை 6.00 மணிக்கு காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள பெருந்தேவி தாயார் சன்னதியிலிருந்து, ஸ்ரீவாரி உண்டியல் நகர்வலம் புறப்படுகிறது. திருமலை சுவாமிக்கு சேர்க்கப்பட உள்ள இந்த உண்டி, ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோயில் வழியாக, நாமசங்கீர்த்தனத்துடன் நகர் வலம் வருகிறது. பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை உண்டியலோடு சேர்த்து திருமலை ஸ்ரீவாரி உண்டியலில் வரும் 16ம் தேதி சமர்ப்பிக்கப்படும்.