திண்டிவனம் அம்மன் கோவில் தீமிதி விழா
ADDED :4137 days ago
திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த மானூர் ஊராட்சியில் உள்ள மன்னார்சாமி சமேத பச்சை வாழியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதையொட்டி நேற்று முன்தினம் மூலவருக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் பொங்கல் வைத்து படையலிட்டனர். இரவு 7 மணிக்கு, வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது. மன்னார்சாமி சமேத பச்சைவாழியம்மன் உற்சவ மூர்த்தி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர். நேற்று காலை பக்தர்கள் தீமிதித்து நேர்த்தி கடன் செலுத்தினர்.