உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கள்ளக்குறிச்சி சர்க்கரை விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி சர்க்கரை விநாயகர் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்!

கள்ளக்குறிச்சி: விருகாவூரில் சர்க்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது.கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூரில் சர்க்கரை வினாயகர், சீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா 2 நாட்கள் நடக்கிறது. இன்று (11ம் தேதி) காலை 9:00 மணிக்கு விநாயகர் வழிபாடு, கணபதி, மகாலஷ்மி, நவநாயகர் தெய்வங்களுக்கு யாகம் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு முதற்கால பூஜை துவங்குகிறது. நாளை அதிகாலை 5:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம், மூல மந்திர யாகம், வேதிகா அர்ச்சனை நடக்கிறது. காலை 7:30 மணிக்குமேல் 8:15க்குள் சர்க்கரை விநாயகர், சீனிவாச பெருமாள், சிவசக்தி அம்மன் கோவில் களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான ஏற் பாடுகளை ஊர் பொது மக்கள் மற்றும் விருகாவூர் துளுவ வேளாளர் சங்கத் தினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !