மயிலம் வைகாசித் திருவிழா!
                              ADDED :4159 days ago 
                            
                          
                           மயிலம்: மயிலம் கன்னியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில் சாகை வார்த்தல் நடந்தது. மயிலம் கன்னியம்மன் சுவாமிக்கு வைகாசி திருவிழாவை முன்னிட்டு, மலையடிவாரம் மயிலாடும் பாறை அருகில் பூங்கரகம், கன்னியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக சென்றனர். கிராம மக்கள் இசையுடன் நாட்டுப்புறப் பாடல்களை பாடி சென்றனர். மயிலம் ஜெ.ஜெ. நகரில் உள்ள அம்மன் கோவிலில் பகல் 12 மணிக்கு சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. பிற்பகல் ஒரு மணிக்கு சாகை வார்த்தல் நடந்தது. மாலை 6 மணிக்கு அம்மன் வீதியுலா காட்சி நடந்தது.