உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர் திருவிழா!

தீவனூர் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் தேர் திருவிழா!

திண்டிவனம்:  தீவனூர்  லட்சுமி நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா தேரோட்டம் நடந்தது. திண்டிவனம் அடுத்த தீவனூர்  லட்சுமி  நாராயண பெருமாள் கோவிலில்  கடந்த 4 ம் தேதி பிரம்மோற் சவ விழா துவங்கியது.  விழாவையொட்டி உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா  நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கடக லக்கனத்தில் தேரோட்டம் நடந்தது. பின், இன்று காலை 9.05 மணிக்கு ஹோமம், திருமஞ்சனம், உள்புறப் பாடு, சாந்தி ஹோமம், மகாபூர்ணாஹூதி மற்றும் இரவு 7 மணிக்கு  சந்திர பிரபை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை  தர்மகர்த்தா  நாமக்கார முனுசாமி செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !