உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ணகிரி கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை!

கிருஷ்ணகிரி கோவில்களில் குருபெயர்ச்சி சிறப்பு பூஜை!

காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம், பெண்ணேஸ்வரர் கோவிலில், குருபெயர்ச்சி சிறப்பு பூஜை இன்று நடக்கிறது.கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரர் மடம் ஸ்ரீ வேதநாயகி சமேத பெண்ணேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, இன்று மாலை, 4.30 மணிக்கு பரிகார ஹோமமும், 5.58 மணிக்கு, குரு இடம் பெயர்ச்சியை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் நடக்கிறது. மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுஷ் ஆகிய ராசிக்காரர்கள் சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள வேண்டுமென, கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏற்பாடுகளை, கோவில் குருக்கள் மோகன்குமார் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.* தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஸ்ரீ அபித குஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் குருபெயர்ச்சியை முன்னிட்டு, நாளை மாலை பரிகார ஹோமமும், தொடர்ந்து, குரு பகவானுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, விழாக்குழு தலைவர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் புருஷோத்தமன் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர், வேல்முருகன் கோவில், குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், தர்மபுரி தீயணைப்பு துறை அலுவலகம் அருகே உள்ள சிவன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அரூர் தீர்த்தகிரீஸ்வரர் கோவில், புட்டிரெட்டிப்பட்டி சோமேஸ்வரர் கோவில், ஒகேனக்கல் தேசநாதேஸ்வரர் கோவில், பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், குருபெயர்ச்சியை முன்னிட்டு, நாளை மாலை, 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !