காரிமங்கலம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :4145 days ago
காரிமங்கலம்: காரிமங்கலத்தை அடுத்த காட்டுசிகரலஹள்ளி, ஸ்ரீகற்பக விநாயகர், ஸ்ரீமாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் கணபதி ஹோமம், பூஜை மற்றும் முதல் கால யாக பூஜை, கோபுர கலசம் நிறுவதல், அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் உள்ளிட்டவை நடந்தது. நேற்று அதிகாலை, 1.30 மணிக்கு, கணபதி பூஜை, இரண்டாம் கால யாகபூஜை, நவக்கிரக ஹோமம் நடந்தது. 4.30 மணிக்கு மேல், 6 மணிக்குள், மஹா கும்பாபிஷேகம் நடந்தது. காரிமங்கலம் நஞ்சுண்ட பட்டாச்சாரியார், சக்கரவர்த்தி பட்டாச்சாரியர் ஆகியோர் தலைமை வகித்து கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். 7 மணிக்கு, ஸ்வாமிக்கு, மஹா அபிஷேகம், தீபாராதனையும், 9 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.