வேடசந்துரில் மஹா குரு பெயர்ச்சி யாகம் நடந்தது!
வேடசந்தூர் அரியப்பித்தம்பட்டி ரோட்டில் உள்ள தங்கமஹால் மங்கள விநாயகர், மங்கள சுப்பிரமணியர் திருக்கோயிலில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு மஹா குரு பெயர்ச்சி யாகம் நடந்தது. விநாயகர் அனுமதி பெறுதல், மகா சங்கல்பம், வருண வழிபாடு, வேதிகா பூஜை, மகா பூர்ணாகுதி, மற்றும் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடை பெற்றது. மேஷம், மிதுனம், சிம்மம்,கன்னி, துலாம், தனுசு, கும்பம் ராசிக்காரர்கள் யாகத்தில் கலந்து கொண்டு பரிகாரம் செய்தனர். குரு பகவான் பிரசாதம் வழங்கப்பட்டது. திண்டுக்கல் பிரசன்ன வெங்கடேஸ்வரர் யாகத்தை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தாடிக்கொம்பு: தாடிக்கொம்பை அடுத்த அகரம் முத்தாலம்மன் கோயிலில் குரு பெயர்ச்சி விழா நடந்தது. குரு பகவானுக்கு சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள், தங்களுடைய ராசிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். முத்தாலம்மன் சுவாமிக்கு சாத்துபடி செய்யப்பட்ட புடவைகள் ஏலத்தில் விடப்பட்டது. சென்னமநாயக்கன்பட்டியில் உள்ள பாலமுருகன் கோயில் வளாகத்தில் உள்ள நவக்கிரக ஸ்தலத்தில் நடந்த குரு பெயர்ச்சிவிழாவில் பக்தர்கள் பங்கேற்றனர். பழநி: குருபெயர்ச்சியை முன்னிட்டு, பழநியில் உள்ள கோயில்களில் குருபகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பழநி முருகபெருமானின் மூன்றாம் படைவீடான திருஆவினன்குடி கோயில், தெற்கு உட்பிரகாரத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது, வெள்ளிக்கவசத்தில் தீபாராதனை நடந்தது. உபகோயில்களான பெரியநாயகியம்மன் கோயில், பெரியாவுடையார் கோயில்களில் தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, வில்வம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து, சிறப்பு அபிஷேகங்கள் செய்து, தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நவக்கிரக சன்னதியிலுள்ள, வியாழபகவானுக்கு மஞ்சள்பட்டு சாத்தி, நெய்தீபம் ஏற்றி, பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்தனர். திண்டுக்கல், என். எஸ்.நகர் ஹரிஓம் சிவ சக்தி விநாயகர் கோயிலில் குருபெயர்ச்சியை முன் னிட்டு சிறப்பு யாகம் நடந்தது. கோயிலின் வருஷாபிஷேகத்தை முன் னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டனர்.