காரைக்குடி அரியக்குடி அலர்மேல் மங்கை கோயில் தேரோட்டம்!
ADDED :4143 days ago
காரைக்குடி : தென் திருப்பதிகளில் ஒன்றான,அரியக்குடி அலர்மேல் மங்கை உடனுறை திருவேங்கமுடையான் திருக்கோயில், கொடியேற்றம் கடந்த 5-ம் தேதி நடந்தது. விழா நாட்களில், சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று, தேரோட்டம் நடந்தது. முன்னதாக காலை 6.30 மணிக்கு, திருமஞ்சனம் முடிந்து, சுவாமி சீதேவி, பூதேவியுடன் தேருக்கு எழுந்தருளினார். அங்கு அவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 4.30 மணிக்கு, தேர்வடம் பிடிக்கப்பட்டது. நான்கு வீதி வழியாக, இரவு 7 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. வரும் 16-ம் தேதி தெப்பதேர் விழாவும் நடக்கிறது.