சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி விழா!
ADDED :4136 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஆனித் திருமஞ்சன விழா, வரும், 25ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்குகிறது. வரும், 23ம் தேதி மாலை, விக்னேஸ்வர பூஜை, அனுக்ஞை வாஸ்து சாந்தி மற்றும் துவஜபட பூஜை நடக்கிறது. சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு, வரும், 25ம் தேதி சிறப்பு அபிஷேகம், தொடர்ந்து, ஆனித் திருமஞ்சன கொடியேற்றம் நடக்கிறது. அடுத்த மாதம், 4ம் தேதி அதிகாலை, மகா அபிஷேகம், ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி உடனுறை நடராஜருக்கு சிறப்பு பூஜைகள், மதியம், ஆனித் திருமஞ்சனம் நடக்கிறது.