அரும்பட்டு திரவுபதியம்மன் கோவிலில் திருப்பணி துவக்கம்
ADDED :4128 days ago
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே திரவுபதியம்மன் கோவிலில் திருப்பணி துவக்க விழா நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரும்பட்டு பழமையான திரவுபதியம்மன் கோவிலில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பணிகள் துவக்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்டன. கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோவிலை விரைவாக கட்ட முடிவு செய்தனர்.இதன் பேரில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு விக்னேஸ்வரபூஜையுடன் திருப்பணிகள் துவங்கின. தொடர்ந்து புண்யாகவாசனம், கலாகருஷ்ணம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடந்தன. பின், அத்திமரப்பலகையில் அம்மன் பாலாலய பிரதிஷ்டை செய்யப்பட்டது.பூஜைகளை அழகர்சிவம், விஜயகுமார சாமிகள் செய்தனர். ஸ்தபதி ராமசாமி, ஊர் பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.