உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாந்தகாளி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

சாந்தகாளி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா!

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் சாந்தகாளி அம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது. விழாவையொட்டி, பெண்கள் பால்குடங்களை  ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, வளையல் திருவிழாவும் மஞ்சள் காப்பு உற்சவம், பூங்கரக  ஊர்வலம், சாகை வார்த்தல் உற்சவமும் நடந்தது. பின்னர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜைகளை  பாலாஜி, பிரபாகரன் பூசாரிகள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !