பிரத்தியங்கிரா காளி கோவிலில் துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை!
ADDED :4128 days ago
புதுச்சேரி: பிரத்தியங்கிரா காளி கோவிலில் 17ம் ஆண்டு குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. புதுச்சேரி அருகே மொரட்டாண்டியில் உள்ள பிரத்தியங்கிரா காளி கோவிலில், நடாதூர் நம்பி சுவாமிகளின் 17ம் ஆண்டு குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6.00 மணி முதல் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், ருத்ர ஜபம், பாராயணம் நடந்தது. நடாதூர் நம்பி சுவாமிகளுக்கு 108 கலச அபிஷேகம், ஆராதனை, தீபாராதனை நடந்தது. 17ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, குருபூஜை மற்றும் 108 துறவிகளுக்கு மகேஸ்வர பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. விழா ஏற்பாடுகளை, நடாதூர் ஜனார்த்தன சுவாமிகள் செய்திருந்தார்.