உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை அந்தோணியார் தேவாலயத் திருவிழா துவக்கம்!

நாகை அந்தோணியார் தேவாலயத் திருவிழா துவக்கம்!

நாகப்பட்டினம்: நாகை, பழமையான அந்தோணியார்  தேவாலயம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.இதில் திரளான பக்தர்கள்  கலந்து கொண்டனர். நாகை கடற்கரை சாலையில் உள்ள பழமையான அந்தோணியார் தேவாலயம்  ஆண்டு திருவிழா, நேற்று முன்தினம் இரவு  கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக துவங்கிய கொடி பவனி, முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து தேவாலயத்தை வந்தடைந்தது.பின்  மறைமாவட்ட முதன்மை பாதிரியார் செல்வன் செபாஸ்டின்,கொடியை புனிதம் செய்தபின் கொடியேற்றப் பட்டது. கொடியேற்ற நிகழ்ச்சியிலும்  பின்னர் நடந்த சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியிலும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து நாள்தோறும் திருப்பலி, செபமாலை,  மறையுரை மற்றும் தேர்பவனி நடக்கிறது.முக்கிய நிகழ்ச்சியாக வரும் 29  ம் தேதி பெரிய சப்பரபவனியும், கூட்டுபாடல் திருப்பலியும்  நடக்கிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி பாதிரியார்கள் மற்றும்  பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !