உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகா... உனக்கு இன்றும் ஓரவஞ்சனை: அன்று பழம்...இன்று பணம்!

முருகா... உனக்கு இன்றும் ஓரவஞ்சனை: அன்று பழம்...இன்று பணம்!

வால்பாறை: வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், அறநிலையத்துறை சார்பில் திருப்பணிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தயக்கம்  காட்டுவதால், பக்தர்கள் கவலை அடைந்துள்ளனர்.  வால்பாறை நகரின்  மத்தியில் அமைந்துள்ளது ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில். பிரசித்தி  பெற்ற இந்த கோவிலில் முருகன், வள்ளி–தெய்வானையோடு பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கோவில் வளாகத்தில் விநாயகர், ஐயப்பன், காசி விஸ்வநாதர்,நவக்கிரகம் ஆகிய தெய்வங்களுக்கு தனித்தனி ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்திருவிழா,தைப்பூசத்திருவிழா, ஐயப்பசுவாமி கோவில் மண்டல பூஜைத் திருவிழா,  சூரசம்ஹாரவிழா உட்பட பல்வேறு விழாக்கள் பக்தர்கள் சார்பில் கொண்டாடப்படுகிறது.

இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த கோவிலில், அரசு சார்பில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்யப்படுவதில்லை.  ஆண்டு தோறும் கோவில் உண்டியல் மற்றும் கடைவாடகை ஆகியவற்றின் மூலம் சுமார் ரூ.3 லட்சம் வருமானம் வந்த போதிலும், கோவிலுக்கு ÷ தவையான வசதிகள் செய்து தருவதில் அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டுவதாக, பக்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இந்து அறநிலைய த்துறை துணை ஆணையாளர் அனிதாவிடம் கேட்ட போது, கோவிலுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கோவிலை சுற்றிலும்  விரைவில் காம்பவுண்டு சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கோவில் பாதுகாப்பு கருதி விரைவில் கேமரா பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !