உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகேஸ்வர ஸ்வாமி கோவில் பைரவருக்கு சிறப்பு பூஜை!

நாகேஸ்வர ஸ்வாமி கோவில் பைரவருக்கு சிறப்பு பூஜை!

நாமக்கல்: நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில், தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல் அடுத்த பெரியமணலியில், பிரசித்தி பெற்ற நாகேஸ்வர ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு, ஸ்வாமி, சிவகாம சுந்தரியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பைரவருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு, அஷ்டமி தேய்பிறை அன்று சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடப்பது வழக்கம். நேற்று முன்தினம், அஷ்டமி தேய்பிறையை முன்னிட்டு, நாகேஸ்வர ஸ்வாமி கோவிலில் உள்ள பைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. அன்று மாலை, 6 மணி முதல், 8 மணி வரை ஸ்வாமிக்கு மஞ்சள், திருமஞ்சனம், பச்சரிசி மாவு, திருநீர், சந்தனம், பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், எலுமிச்சை, தேன் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்வாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த பூஜையில், திருமணமாகாதவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், உடல் நலம் மற்றும் குடும்ப பிரச்னை உள்ளவர்கள் பங்கேற்று வேண்டிக் கொண்டால், கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். ஏராளமான பக்தர்கள், ஸ்வாமியை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !