உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவம்!

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தெப்ப உற்சவம்!

திருவள்ளூர் : திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு, தெப்ப உற்சவம், நாளை முதல், மூன்று நாட்கள் நடைபெற உள்ளது. இதற்காக, ஒரு மாதமாக தெப்பம் சீர்படுத்தும் பணி நடந்தது.நாளை, துவங்கி, வரும், 28ம் தேதி வரை, இரவு 7:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடைபெறும்.இதில், வீரராகவர், பூதேவி, ஸ்ரீதேவியுடன் தெப்பலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மேலும், மூன்று நாட்களும் காலை, 5:00 மணி முதல், மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இத்தகவலை, கோவில் கவுரவ ஏஜென்ட் சம்பத் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !