விழுப்புரம் உலக நன்மைக்காக சிறப்பு தியானம்!
ADDED :4124 days ago
விழுப்புரம்: மாதேஸ்வரி ஜகதம்பா சரஸ்வதியின் 49வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு உலக நன்மைக்கான சிறப்பு தியானம் வளவனூரில் நடந்தது.வளவனூர் மேற்கு அக்ரகாரத்தில் இயங்கி வரும், பிரம்மகுமாரிகள் இயக்கத்தின் சார்பில், ஈஸ்வரிய சேவை செய்த, மாதேஸ்வரி ஜகதம்பா சரஸ்வதியின் 49வது ஆண்டு புனித நினைவு நாளை முன்னிட்டு உலக நன்மை வேண்டி சிறப்பு தியானம் நேற்று நடந்தது. காலை 7:00 மணி முதல் 8:30 மணி வரையும், இரவு 7:00 மணி முதல் 8:30 மணி வரையும் ராஜயோக தியானப் பயிற்சி அளிக்கப்பட்டது. நிர்வாகி செல்வமுத்துகுமரன் தலைமையில் சிறப்பு தியானங்கள் நடந்தது. பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தியானம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.