உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலையில் கிருத்திகை வழிபாடு!

சென்னிமலையில் கிருத்திகை வழிபாடு!

சென்னிமலை: சென்னிமலை மீதுள்ள முருகன் கோவிலில், நேற்று கிருத்திகை மற்றும் செவ்வாய் கிழமையை முன்னிட்டு, பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. இதனால், பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில், காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர். சென்னிமலை சுப்பிரமணியஸ்வாமி கோவில், முருகன் திருத்தலங்களில் மிகவும் பிரசத்தி பெற்றது. இங்கு, வராம் தோறும், செவ்வாய்கிழமை அதிகாலை முதல், பக்தர்கள் ஸ்வாமி தரிசனத்துக்கு திரண்டு வருவார்கள்.நேற்று, செவ்வாய் கிழமை மற்றும் கிருத்திகை என்பதால், மக்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. மேலும், வரும் ஜூலை, ஏழாம் தேதி, இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. திருப்பணிகள் மிக சுறுசுறுப்பாக நடக்கிறது. இந்த பணிகளை பார்வையிடவும், பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்திருந்தனர். கூட்டம் மிக அதிகமாக இருந்ததால், பக்தர்கள் பொது தரிசனம் வழியில், மூன்று மணி நேரத்துக்கு அதிகமாகவும், சிறப்பு கட்டணத்தரிசனம் வழியில், ஒரு மணி நேரமும், கடும் வெயிலையும் பொறுப்படுத்தாது, நீண்ட வரிசையில் காத்திருந்து ஸ்வாமி தரிசனம் செய்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !