உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பவானி சங்கமேஸ்வரருக்கு ரூ.10 லட்சத்தில் தங்ககவசம்!

பவானி சங்கமேஸ்வரருக்கு ரூ.10 லட்சத்தில் தங்ககவசம்!

பவானி: பவானி சங்கமேஸ்வரர் கோவிலில் உள்ள மூலவருக்கு, மூன்று பக்தர்கள் சேர்ந்து, 10 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்க கவசம்  வழங்கினர்.பவானி, வேதநாயகி உடனமர் சங்கமேஸ்வரர் கோவில், மிகவும் பிரசித்தி பெற்ற, பழமையான கோவிலாகும். காசிக்கு அடுத்த  மிகப்பெரிய பரிகார ஸ்தலமாகும். இங்கு, கடந்த, 9ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது.பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் மூலவர்  சங்கமேஸ்வரருக்கு, பவானியை சேர்ந்த அக்னி ராஜா, சவுண்டப்பன், ரவி ஆகியோர் குடும்பத்தினர் சார்பில், நேற்று தங்க  நாகாபரணத்துடன் கூடிய, தங்க ஆவுடையார் காணிக்கையாக, கோவில் நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.நேற்று காலை, இந்த தங்க  கவசம், நந்தி சிலை முன் வைக்கப்பட்டு, பல வகையான விஷேச பூஜை செய்யப்பட்டது. பின், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து,  புதிய தங்க கவசம் சாற்றப்பட்டு, மஹா தீபாராதனை நடந்தது.புதிதாக தங்ககவசம் சாற்றப்பட்டதால், இக்கோவிலுக்கு, அதிக அளவிலான  பக்தர்கள் வந்து, கவசத்தை பார்த்ததுடன், மூலவரை தரிசித்து சென்றனர்.மிக முக்கிய விசேஷ நாட்களில் மட்டும், மூலவருக்கு, இந்த  தங்ககவசம் சாற்றப்பட உள்ளது.கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘பக்தர்கள் மூவர் சேர்ந்து, பத்து லட்சம் ரூபாய் செலவில்,  மூலவர் உருவத்துக்கு பொருந்தும் வகையில், வெள்ளியினால் ஆன கவசம் செய்து, அதற்கு தங்க முலாம் பூசி வழங்கி உள்ளனர். இந்த  தங்க கவசத்துடன், மூலவர், பிரம்மாண்டமாக ஜொலிப்பதாக, பக்தர்கள் தெரிவிக்கின்றனர்’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !