சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன கொடியேற்றம்!
ADDED :4126 days ago
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில், ஆனி திருமஞ்சனம், கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆனி திருமஞ்சன தரிசனம், ஜூலை 4ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, கொடியேற்றத்துடன் விழா நேற்று துவங்கியது. சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சுவாமிக்கு, அதிகாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் புறப்பாடு முடிந்து, கோயில் கொடிமரம் அருகே சுவாமிகள் எழுந்தருளினர். பின், கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியபடி தரிசனம் செய்தனர். ஆனி திருமஞ்சன தரிசனம், 4ம் தேதி நடக்கிறது. அன்று அதிகாலை, மகா அபிஷேகமும், தொடர்ந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு பூஜை, மதியம் ஆனி திருமஞ்சனம் சுவாமி தரிசனம் நடக்கிறது.