உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ரூ.7.48 லட்சம் ஏல வரவு!

ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு ரூ.7.48 லட்சம் ஏல வரவு!

ஸ்ரீபெரும்புதுார் : ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில் பிரசாத கடை மற்றும் வாகன கட்டண வசூல் உள்ளிட்டவற்றை ஏலம் விட்டதில், கோவிலுக்கு 7.48 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.பொது ஏலம் : ஸ்ரீபெரும்புதுாரில் ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவில் அமைந்துள்ளது. மிகவும் பழமையானது.நேற்று காலை 11:00 மணிக்கு, செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில், ஏலம் விடப்பட்டது. இதில், பொது ஏலத்தில் யாரும் கலந்து கொள்ளவில்லை. டெண்டரில் மட்டுமே, குத்தகை எடுக்க விரும்பி, டெண்டர் பெட்டியில், ஏலத்தொகை எழுதி கேட்டிருந்தனர்.அதன்படி, அதிகமான ஏலத்தொகைக்கு டெண்டர் கேட்டவருக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் ஒதுக்கீடு செய்தது. இதில், கோவில் வளாகத்தில் வாகனங்கள் நிறுத்த 1,82,000 ரூபாய், பூக்கடை நடத்த 59,750 ரூபாய், அர்ச்சனை பொருட்கள் விற்பனை செய்யும் நிலையத்திற்கு 1,42,200 ரூபாய், பிரசாத கடைக்கு, 3.65 லட்சம் ரூபாய் என, டெண்டர் கோரியவர்களுக்கு, குத்தகை விடப்பட்டது.கடந்த ஆண்டை விட அதிகம் : இந்த டெண்டர் மூலம் கோவிலுக்கு, 7,48,850 ரூபாய் வருவாய் கிடைத்து உள்ளது. இது கடந்த ஆண்டை விட 1,26,850 ரூபாய் அதிகம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !