அருணாசல ஈஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு!
ADDED :4442 days ago
செஞ்சி: செஞ்சி அருணாசல ஈஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. அருணாச்சலேஸ்வரர், அபிதகுசாம்பிகை மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பெண்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாத வினியோகம் நடந்தது. திருப் பணிக் குழு தலைவர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி கோவிலில் பி ரேதோஷ வழிபாடு நடந்தது. நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். பக்தர்கள் அகல் விளக்கேற்றி வழிபட்டனர். பிரசாத வினியோகம் நடந்தது. பூஜைகளை அருட்பெரும் ஜோதி குருக்கள் செய்தார்.