உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம்!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சீனிவாச கல்யாணம்!

நகரி: நகரி, அரசு கலைக் கல்லுாரி மைதானத்தில், திருப்பதி தேவஸ்தானம் சார்பில், சீனிவாச கல்யாணம் நடந்தது.சித்துார் மாவட்டம்,  நகரி பகுதி பக்தர்களின் கோரிக்கையின் பேரில், முதன் முதலாக நேற்று முன்தினம், திருப்பதி தேவஸ்தான அர்ச்சகர்கள்  ஐதீகமுறைப்படி சீனிவாச திருக்கல்யாண உற்சவம் நடந்தது.உலக மக்களின் நன்மைக்காகவும், மழை வேண்டியும் நடத்தப்பட்ட கல்யாண  உற்சவ வைபவத்தில் திருப்பதி தேவஸ்தான துணை நிர்வாக அதிகாரி சீனிவாசராஜு, துணை அதிகாரி ஆனந்தன் உட்பட  ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தமிழக எல்லைப்பகுதியான திருத்தணி, பள்ளிப்பட்டு, அத்திமாஞ்சேரிபேட்டை,  பொதட்டூர்பேட்டை, ஊத்துக்கோட்டை போன்ற இடங்களில் இருந்தும் இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !