சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமாவாசை சிறப்பு பூஜை!
ADDED :4126 days ago
சாணார்பட்டி : திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆனிமாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் நடந்தது. சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி ஊராட்சி திருமலைக்கேணிசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு விநாயகர், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை நடந்தது.இதை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி சுவாமிகளை வழிபட்டனர். இதைதொடர்ந்து அங்குள்ள முத்துக்காமாட்சி மவுனக்குருசாமி மடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் அறநிலைய நிர்வாகம் மற்றும் முத்துக்காமாட்சி மவுனகுரு மடநிர்வாகிகள் செய்திருந்தனர்.