மாயூரநாத சுவாமி கோயில் விநாயகர் பிரதிஷ்டை!
ADDED :4126 days ago
ராஜபாளையம் : ராஜபாளையம்-மதுரை ரோட்டில், மாயூரநாத சுவாமி கோயில் அருகே பழமையான ஆதிவழிவிடு விநாயகர் கோயில் உள்ளது. இதன் திருப்பணிகள் தடையின்றி முடிய, தெற்கு நோக்கி உள்ள கன்னி விநாயகர்சிலை சிமின்ட்டால் அமைக்கப்பட்டு, நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. சேத்தூர் ஜமீன் துரைராஜசேகர், மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்ற தலைவர் ராமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.