இருக்கன்குடி கோயில் மண்டபம் திறப்பு!
ADDED :4229 days ago
சாத்தூர் : இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வடக்கு பிரகாரமண்டபம் ரூ.25 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் ஜெ., நேற்று மதியம், சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதன்பின்னர் கோயில் செயல்அலுவலர் தனபாலன், கோயில் பரம்பரை அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்தி பூஜாரி ஆகியோர் புதிய மண்டபத்தில் குத்து விளக்கேற்றினர்.தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் கணபதி ஹோமம் நடைபெற்றது.