மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் திறப்பு!
ADDED :4126 days ago
திருப்புவனம் : மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. பரமக்குடி உதவி ஆணையர் ரோசலிசுமதா மேற்பார்வையில் தன்னார்வ தொண்டர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். 5 லட்சத்து 82ஆயிரத்து 550ரூபாய், 97.200 கிராம் தங்கம், 108.800 கிராம் வெள்ளி காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.