அர்த்தநாரீஸ்வர் கோவிலில் திருமண தடை பரிகார பூஜை!
ADDED :4131 days ago
தியாகதுருகம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருமணத்தடை பரிகார பூஜைகள் நடந்தது. ரிஷிவந்தியம் அர்த்தாநாரீஸ்வரர் கோவிலில் அமாவாசை தினத்தில் வழிபாடு நடத்தினால் திருமண தடை தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதனால் மாதம்தோறும் அமாவாசையன்று பரிகார பூஜைகள் நடக்கின்றன. நேற்று முன்தினம் அமாவாசையை முன்னிட்டு மூலவர் சுயம்பு லிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆ ராதனைகள் நடந் தன. முத்தாம்பிகை அம்மனுக்கு விஷேச அலங்காரம் செய்யப்பட்டது. திருமண தடை தோஷம் உள்ள கன்னிப்பெண்கள், இளைஞர்கள் கோவிலில் தீபம் ஏற்றி மூலவருக்கு சாற்றிய மாலையை அணிந்து கோவிலை வலம் வந்து வழிபாடு நடத்தி பரிகார பூஜைகள் நடத்தினர். கோவில் குருக்கள் நாகராஜ், சோமு ஆகியோர் பூஜைகளை செய்தனர்.