உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் பக்தர்கள் தரிசனம்!

அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் பக்தர்கள் தரிசனம்!

சத்தியமங்கலம்: அமாவாசை என்பதால், பண்ணாரி கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவில் ஒன்றாகும். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், தமிழ் மாதம் பங்குனியில், வரும் உத்திர நட்சத்திரம் அடுத்த செவ்வாய்கிழமை நடக்கும் குண்டம் விழாவில், தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வர். பண்ணாரி கோவிலில், அமாவாசை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. காலை முதல், பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். பண்ணாரி மாரியம்மன், தங்க கவசத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் முன் பக்தர்கள் தக்காளி சாதம், தயிர் சாதங்களை அன்னதானமாக வழங்கி, தங்கள் நேர்த்திகடனை நிறைவு செய்தனர்.சத்தியமங்கலத்தில் இருந்து, அரசு போக்குவரத்து கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்நிலையில், கோவிலின் அன்னதான உண்டியல் எண்ணும் பணியும் மற்றும் பல்வேறு ஏலங்களும் நடந்தது. மாலை ஆறு மணி, பூஜை முடிந்தவுடன், பக்தர்கள், தங்கத்தேர் இழுத்து, தங்கள் நேர்த்திக்கடனை நிறைவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !