உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாரியூர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சம் வருவாய்!

பாரியூர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.8 லட்சம் வருவாய்!

கோபிசெட்டிபாளையம்: கோபி, பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், அதிகாரிகள் முன்னிலையில், பத்து உண்டியல்கள், எண்ணப்பட்டதில், 8.11 லட்சம், பக்தர்கள் காணிக்கை மூலம் வருவாய் கிடைத்தது.கோபி தாலுகா, பாரியூர், பச்சமலை, பவளமலை, என ஏராளமான புகழ்பெற்ற கோவில்கள் உள்ளன. கோபியில் இருந்து, அந்தியூர் செல்லும் ரோட்டில், இரண்டு கிலோ மீட்டர் தொலைவில், பாரியூரில், வயல்களுக்கு நடுவே, கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இங்குள்ள, அம்மன் கோவிலில், ஏழு உண்டியல்கள், அமரபணீசுவரர் கோவிலில், இரு உண்டியல், ஆதிரநாரயணப்பெருமாள் கோவிலில், ஒரு உண்டியல், என, பத்து உண்டியல், அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது. கோவை மருதமலை சுப்பிரமணய சுவாமி கோவில் துணை கமிஷனர் பழனிகுமார், தக்கார் சபர்மதி, செயல் அலுவலர் மாலா, ஆய்வாளர் சந்திரசேகரன், முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் முத்துவேலப்பன், கார்ப்பரேசன் வங்கி மேலாளர் பூபதிராஜா ஆகியோர் பார்வையிட்டனர்.மொத்தம், எட்டு லட்சத்து, 11 ஆயிரத்து, 348 ரூபாய் ரொக்கம், 52 கிராம் தங்கம், 85 கிராம் வெள்ளி, வெளிநாட்டு நாணயங்கள், அமெரிக்க டாலர் இரண்டு, சென்ட்ரல் பேங்க் ஆஃப் செசல்ஸ் நாணயம், ஐக்கிய அரபு நாடுகள் திராம் ஒன்று, மலேசிய நாணயம் ரிங்செட் தலா ஒன்று இருந்தது. கோபி கம்பன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள், பி.கே.ஆர். மகளிர் கல்லூரியை சேர்ந்த மாணவியர், 40 பேர் உண்டியல் எண்ணினர். கடந்த, ஃபிப்., ஆறாம் தேதி திறந்தபோது, 12 லட்சம் ரூபாய், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !