உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர பவனி!

நாகை அந்தோணியார் தேவாலய பெரிய சப்பர பவனி!

நாகப்பட்டினம்: நாகையில், பழமையான அந்தோணியார் தேவாலய ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு, பெரிய சப்பர பவனி நடந்தது. நாகை, கடற்கரை சாலையில் அமைந்துள்ளது, 450 ஆண்டுகள் பழமையான அந்தோணியார் தேவாலயம். இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் திருப்பலி, செபமாலை, மறையுரை மற்றும் தேர் பவனி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக, நேற்று முன்தினம் இரவு, கூட்டு பாடல் திருப்பலிக்குப் பின், பெரிய சப்பர பவனி நடந்தது. அலங்கரிக்கப்பட்ட பெரிய சப்பரத்தில், புனித லுார்து மாதா மற்றும் அந்தோணியார், முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !