உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம்!

திருவாரூர் ஆழித்தேர் 3 மாதத்தில் வெள்ளோட்டம்!

திருவாரூர்: திருவாரூர் ஆழித்தேர் கட்டுமான பணி, மூன்று மாதத்தில் முடிக்கப்படும், என்று, அறநிலையத் துறை ஆணையர் தனபால் தெரிவித்தார். வரலாற்று சிறப்பு மிக்க, திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவிலின் ஆழித் தேர், ஆசியா கண்டத்திலேயே, இரண்டாவது மிகப்பெரிய தேர். தேரில் உள்ள சில பாகங்கள் சேதமடைந்ததால், 2 கோடியே, 17 லட்சம் ரூபாய் மதிப்பில், புதிய தேர் செய்யும் பணி நடக்கிறது. ௪ ஆண்டுகளாக, இப்பணி நடந்து வருவதால், 2010க்கு பின், தேரோட்டம் நடக்கவில்லை. கடந்த வாரம், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் திருவாரூர் கலெக்டர் மதிவாணன் ஆகியோர், தேர் செய்யும் பணிகளை பார்வையிட்டு, பணியை துரிதப்படுத்துமாறு உத்தரவிட்டனர். இந்நிலையில், வலங்கைமான் அருகே, ஆலங்குடியில் உள்ள ஆப்தசகாயேஸ்வரர் கோவில் தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொள்ள வந்த, இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தனபால், திருவாரூரில், ஆழித்தேர் பணியை, ஆய்வு செய்தார். அப்போது, அவர் கூறியதாவது:ஆழித் தேர் கட்டுமான பணி, 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, வெள்ளோட்டம் நடைபெறும். மேலும், திருவாரூர் பகுதியில், அறநிலைய துறைக்கு சொந்தமான இடத்தில், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும், கட்டுமானப் பணிகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !