உலகளந்த பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தயார்!
ADDED :4130 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் மூலஸ்தான விமானங்கள் வண்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலை 500 ஆண்டுகளாக ஜீயர் பரம்பரையினர் நிர்வகிக் கின்றனர். தற்போதைய ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் பட்டம் ஏற்று மூன்றாவதாக கும்பாபிஷேக விழாவை நடத்துகிறார். இதற்காக திருவிக்ரமசுவாமி மூலஸ்தானம், விமானம், புஷ்பவல்லி தாயார் சன்னதி, மூலஸ்தான கோபுரம், ராமர் சன்னதி, வரதராஜர், விஷ்ணுதுர்க்கை, வாமனர் சன்னதிகள் புது ப்பிக்கப்பட்டுள் ளது. பிரகாரங்களில் புதிய கல் பதிக்கப்பட்டுள்ளது. இதற்கான மகா கும்பாபிஷேகம் வரும் நான்காம் தேதி நடப்பதால் கும்பாபிஷேக ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. திருவிக்ரமன் மூலஸ்தானம் மாற்றப்பட்டுள்ளது. அதேபோல் புஷ்பவல்லி தாயார் சன்னதி உள்ளிட்ட இடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தான விமானங்கள், மண்டபங்கள் வண்ணம் தீட்டப்பட்டு கும்பாபிஷேகத்திற்கு தயார் நிலையில் உள்ளது. யாகசாலைக்கான பணிகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. இதற்கான ஏற்பாடுகள் ஜீயர் ஸ்ரீநிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின்பேரில் கோவில் நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர்.