முத்துமாரியம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா
ADDED :4128 days ago
திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அடுத்த டி.கொடியூர் முத்துமாரியம்மன் கோவிலில் நேற்று வருஷாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8:30 மணிக்கு கோ-பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. காலை 9:00 மணிக்கு அனுக்ஞை மற்றும் சங்கல்பம் நடந்தது. காலை 10:00 மணிக்கு கலசபூஜையும், சிறப்பு யாகங்களும் நடந்தன. மதியம் 12:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், 12:45 மணிக்கு கலச அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், மதியம் 1:30 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீதர்அய்யர், கணபதிஅய்யர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.