உழந்தைகீரப்பாளையம் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :4128 days ago
புதுச்சேரி: உழந்தைகீரப்பாளையம் அனிதா நகர் தேவி கருமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம், வரும் 4ம் தேதி நடக்கிறது. உழந்தைகீரப்பாளை யம் அனிதா நகரில் தேவி கருமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புதுப்பிக்கப்பட்டு, வரும் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. அதையொட்டி இன்று (30ம் தேதி) கும்பாபிஷேக பூஜைகள் துவங்குகிறது. கும்பாபிஷேக தினமான 4ம் தேதி காலை 9:15 மணிக்கு மகா தீபாராதனையும், தொடர்ந்து 10:00 மணிக்கு விமான கலசங்களுக்கும், 10:10 மணிக்கு தேவி கருமாரியம்மனுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.