திருவாடானை தூய பேதுரு சர்ச் தேர்பவனி!
ADDED :4128 days ago
திருவாடானை: திருவாடானை அருகே சின்னக்கீரமங்கலம் தூய பேதுரு சர்ச் திருவிழா ஜூன் 22ம் தேதி கொடியேற்றத்தடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சிறப்பு திருப்பலி, நற்கருணை ஆராதனை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு நடந்தது. தூய பேதுரு அமர்ந்த தேர் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. சின்னக்கீரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிறிஸ்துவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.