உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேலத்தில் ஜெகநாத ரதயாத்திரை பக்தர்கள் வழிபாடு!

சேலத்தில் ஜெகநாத ரதயாத்திரை பக்தர்கள் வழிபாடு!

சேலம்: சேலத்தில் வலம் வந்த ஜெகநாத ரத யாத்திரையை வரவேற்று, பக்தர்கள் வழிபட்டனர். அகில உலக கிருஷ்ண பக்தர்கள் இயக்கம் (இஸ்கான்) சார்பில், ஸ்ரீ ஜெகநாத ரத யாத்திரை, நேற்று, சேலத்தில் நடந்தது. சேலம் பட்டைக்கோவில் அருகே, பிற்பகல், 3.50 மணிக்கு ரத யாத்திரை துவங்கியது. ஸ்ரீ ஜெகநாதர், தனது சகோதரர் பலராமன், தங்கை சுபத்ராதேவி மகாராணியுடன் ரதத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் சின்னக்கடை வீதி, முதல் அக்ரஹாரம், கலெக்டர் அலுவலகம், நான்கு ரோடு, புது பஸ் ஸ்டாண்ட், ஐந்து ரோடு வழியாக வலம் வந்த ரத யாத்திரை, சோனா கல்லூரியில் நிறைவடைந்தது. அங்கு, அமைக்கப்பட்ட அரங்கில் பஜனை, ஜெகநாத லீலா, நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அமெரிக்காவை சேர்ந்த அரிபாத பாபு, அவரது துணைவியார், நடிகை குட்டி பத்மினி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !