துர்க்கைக்கு ராகுகால பூஜை!
ADDED :4118 days ago
ஊத்துக்கோட்டை : துர்க்கை கோவில்களில், ராகு காலத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் கோவில், தாராட்சி லோகாம்பிகை சமேத பாபஹரேஸ்வரர் கோவில்களில் உள்ள துர்க்கை அம்மனுக்கு, நேற்று முன்தினம் ராகு கால நேரமான மாலை, 3:00 முதல் 4:30 வரை சிறப்பு பூஜைகள் நடந்தன.முன்னதாக, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து, மகா தீபாராதனை நடந்தது.