குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில் தங்க கவசம்!
ADDED :4116 days ago
சேலம்: சேலம், அம்மாபேட்டை, குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், குமாரசஷ்டியை முன்னிட்டு, நேற்று தங்க கவச சாத்துபடி நடந்தது. சேலம், அம்மாபேட்டை, குமரகுரு சுப்பிரமணிய ஸ்வாமி கோவிலில், குமாரசஷ்டியை முன்னிட்டு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு சண்முகர் யாகம், மலர் அபிஷேகம், தங்க கவச சாத்துபடி, சண்முகார்ச்சனை, சஷ்டி பாராயணம், 108 திருவிளக்கு கூட்டு வழிபாடு ஆகியன நடந்தது. திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.