மாயூரநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்மன் பவனி வர தயாரான தேர்!
ADDED :4119 days ago
ராஜபாளையம்: ஆனிப்பெருந்திருவிழாவை முன்னிட்டு, ராஜபாளையம் பெத்தவநல்லுõர் மாயூரநாதசுவாமி கோயிலில் ஜூலை 10ல் தேரோட்டம் நடக்க உள்ளது. பெரியதேரில் மாயூரநாத சுவாமியும், சிறிய தேரில் அஞ்சல்நாயகி அம்மனும் பவனி வருவர். கம்ப்ரஸர் மூலம் தேரை சுத்தம் செய்து, சக்கரங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணி நேற்று நடந்தது. இந்த பணிக்கான ஏற்பாடுகளை, தர்மாபுரம் மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றத்தினர் செய்து இருந்தனர். இதன் தலைவர் ராமராஜூ, இந்த பணிகளை நேற்று காலை துவக்கி வைத்தார்.