அய்யப்பன் கோவிலில் பிரதிஷ்டா தின விழா!
திருப்பூர் : திருப்பூர், காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பன் கோவில் பிரதிஷ்டா தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு, ஊர் நலன், செல்வ செழிப்பு, மக்கள் நலன் வேண்டி, 1,008 கலசங்களில் திரவியங்கள், புனித நீர் ஊற்றி, சகஸ்ரநாம பூஜைகள் நடந்தன. நேற்று, காலை 5.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், 6.50 மணிக்கு அனைத்து அபிஷேகம் நடந்தது. காலை 10.00 மணிக்கு, களபாபிஷேகம் மற்றும் 1,008 கலசங் களில் இருந்த புனித நீரில் அய்யப்பனுக்கு சகஸ்ரநாம அபிஷேகம் நடத்தப்பட்டது. கலசங்களில் இருந்த நீர், திரவியங்களால் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அய்யப்பன் அருள் பாலித்தார். பிரதிஷ்டா தின விழா பூஜையை, சபரிமலை, பிரதம தந்திரி ஸ்ரீ கண்டரு மோகனரு தந்திரி நடத்தினார். அதன்பின், அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, புஷ்பலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது