உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் விருதுநகரில் கோலாகலம்!

வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம் விருதுநகரில் கோலாகலம்!

விருதுநகர்:விருதுநகர் ராமர் கோயில் வளாகத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை தரிசனம் செய்தனர். திருப்பதி திருமலையில் உள்ளது போல், பத்மாவதி தயார் சமேத வெங்கடாசலபதி பெருமாள் விக்ரகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுவாமி, தாயார் தங்க கவசம் மற்றும் கிரீடத்தில் அருள் பாலிக்கிறார். கும்பாபிஷேக விழா கடந்த 2ம் தேதி நான்கு கால பூஜையுடன் தொடங்கிய நிலையில், நேற்று காலை வெங்கடாசலபதி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது. இதற்காக காலை, விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி, மஹாசாந்தி ஹோமதிகள் மஹா பூர்ணாஹூதி, யாத்ராதானம் நடந்தது. திருப்பதி சடகோப ராமானுஜ பெரிய ஜீயர் தலைமை வகித்தார். கோபுரங்களில் உள்ள சுவாமி கலசங்களில் புனித நீர் தெளிக்க,ஸ்ரீரங்கம் கோயில் முரளிதர பட்டர் கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.இதை முன்னிட்டு பல்லாயிரகணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ., அருப்புக்கோட்டை முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், டாக்டர் ஜெயராமன், கே.ஆர்.கே. கமிஷன் கடை உரிமையாளர் ரங்கசாமி, பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், வக்கீல் நாகராஜன், ராஜா பர்னீச்சர் உரிமையாளர் சுப்பிரமணியன், ஸ்ரீவித்யா கல்லூரி தலைவர் திருவேங்கட ராமானுஜ தாஸ், வயனபெருமாள் நாடார் ஆயில் மில்ஸ் உரிமையாளர் ராஜேஷ், ராமஜெயம் ஆயில் மில்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியன், சதிஷ் கிருஷ்ணன், மலைராஜன், எம்.என்.ராமகிருஷ்ணன், ஆதிநாராயணன், திருவேங்கட மருத்துவமனை உரிமையாளர் ஹர்ஷவர்த்தனன், மேனகை ஜூவல்லர்ஸ் உரிமையாளர்கள் கண்ணன், சரவணகுமார், அம்மன் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் ஸ்ரீநிவாஸ், மகாராஜா கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் ரமேஷ் குமார், பர்மா கடை உரிமையாளர் வெற்றி வேல், ஆஞ்சநேய பக்த ஜன சபை நிர்வாகஸ்தர் ஜம்பு, வெங்கடாஜலபதி சுவாமி பக்தர்கள் குழுவினர், சன் இன்டிரியர் உரிமையாளர் ஹரி, விக்னேஷ் <உட்பட பலர் கலந்து கொண்டனர்.இரவில் சுவாமி நகர்வலம் நடந்தது. ஏற்பாடுகளை ஆஞ்சநேய பக்த ஜனசபை டிரஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடாஜலபதி சுவாமி நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !