உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் ஏகாதச ருத்ர ஜபம்!

பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் ஏகாதச ருத்ர ஜபம்!

திருக்கோவிலுார்: திருவண்ணாமலை பகவான் யோகி ராம் சுரத்குமார் ஆசிரமத்தின் 10ம் ஆண்டு கும்பாபிஷேக விழா  நிறைவாக, நேற்று ஏகாதச  ருத்ர ஜபம் நடந்தது. திருவண்ணாமலை பகவான் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் மகா கும்பாபிஷேக பத்தாம் ஆண்டு நிறைவு விழா, நேற்று  முன்தினம் துவங்கி, இரண்டு நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக, நேற்று காலை 6.30 மணிக்கு மகன்யாசம், ஏகாதச ருத்ர ஜபம், 10.45  அதிஷ்டானத்தில் மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. காலை 11:15 மணிக்கு பக்தர்களின் பஜனை நடந்தது. இதில், 300க்கும் ÷ மற்பட்ட ஏழைகள் மற்றும் சாதுக்களுக்கு வஸ்திரம் தானமாக வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை 4:30 மணிக்கு,  யோகி ராம் சுரத்குமார் குறித்து நான்கு நுால்கள் மற்றும் தெலுங்கு மொழியில் பாடல் சி.டி., வெளியீட்டு விழா நடந்தது. ஆசிரம அறங்காவலர்கள்  புத்தகத்தை வெளியிட, எழுத்தாளர்கள் பெற்றுக் கொண்டனர். மாலை 5:45 மணிக்கு, சென்னை கிருஷ்ண கிருபா மண்டலியின் நாம சங்கீர்த்தனம்,  இரவு 8:00 மணிக்கு பகவான் வெள்ளி ரதத்தில் பவனி, ஆரத்தி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !