லட்சுமி நரசிம்மர் கோவில் சுவாதி சிறப்பு ஹோமம்!
ADDED :4480 days ago
விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவில் சுவாதியை முன்னிட்டு சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்து. பூ வரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சுவாதியை முன்னிட்டு காலை 6 மணிக்கு மூலவர் நரசிம்மருக்கு திருமஞ்சனம் நடந்தது. தங்க கவசம் அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை நடந்தது. 9 மணிக்கு சுதர்சன தன்வந்திரி ஹோமம் துவங்கியது. மதியம் 12.30 மணிக்கு வசுந்தாரா ஹோமம் முடிந்து கடம் புறப்பட்டு மூலவருக்கு தீர்த்தகுடம் மூலம் அபிஷேகம் நடந்தது. ஹோமத்தை காண பக்தர்கள் குவிந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து லட்சுமி, தலைமை குருக்கள் பாத்தசாரதி செய்திருந்தனர்.