உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாலையை ஆக்கிரமித்து கடைகள்: சிரமத்திற்கு ஆளாகும் பக்தர்கள்!

சாலையை ஆக்கிரமித்து கடைகள்: சிரமத்திற்கு ஆளாகும் பக்தர்கள்!

கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவில் முகப்பு மற்றும் அதை சுற்றியுள்ள சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளதால், ÷ பாக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். கும்மிடிப்பூண்டி அருகே, சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது சி றுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில். விஷேச நாட்கள் மட்டுமின்றி, பிற தினங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அந்த கோவிலுக்கு வந்து  செல்கின்றனர். கோவில் கோபுரத்தின் முகப்பிலும், அதை சுற்றியுள்ள சாலைகளை ஆக்கிரமித்து ஏராளமான காய்கறி, பழங்கள் மற்றும் பூக்கடைகள்  உள்ளன. இதனால் கோவிலுக்கு வரும் வாகனங்கள் மற்றும் இதர வாகனங்கள், எதிரும் புதிருமாக சிக்கி ஸ்தம்பித்து நீண்ட வரிசையில் நிற்க ÷ நரிடுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள், கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதுகுறித்து, பல முறை கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்தும்  எந்த நடவடிக்கையும் அவர்கள் எடுக்கவில்லை என, பக்தர்கள் குறை கூறுகின்றனர். இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கோவில் நிர்வாக அ லுவலக ஊழியர் ஒருவர் கூறுகையில், “கடைகளை அப்புறப்படுத்த கோவில் தரப்பில் பல முறை ஆரணி போலீசிடம் தெரிவித்தோம். அன்றைய  தினம் நடவடிக்கை எடுக்கும் போலீசார், அதன் பின்னர் கண்டு கொள்வதில்லை என, தெரிவித்தார். சிறுவாபுரி கோவிலை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு  கடைகளை அகற்றி,  அப்பகுதியில் நிரந்தரமாக போலீஸ் ஒருவரை நியமித்து, ஆக்கிரமிப்புகளை தடுத்து போக்குவரத்தை சீராக வைத்திருக்க ÷ வண்டும் என, பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !