காளத்தீஸ்வரர் கோவிலில் திருமஞ்சனம்!
ADDED :4139 days ago
புதுச்சேரி: காளத்தீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, திருமஞ்சனம் நடந்தது. புதுச்சேரி மிஷன் வீதியிலுள்ள காளத்தீஸ்வரர் வரதராஜப் பெருமாள் கோவில் 11ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 4ம் தேதி துவங்கியது. ஏழாம் நாளான நேற்று காலை 10.00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இதையொட்டி, வரதராஜப் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.